
எமக்காக நாம் உதவிடுவோம் வாரீர் திட்டத்திற்கமைய மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்குவில் கிராமத்தில் மிகவும் தேவைப்பாடு உடைய தந்தையை இழந்த மாணவிக்கான துவிச்சக்கரவண்டி எமக்காக நாம் உதவிடுவோம் மனிதாபிமான உதவிகள் வழங்கும் சமூக அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க குடத்தனை அகரம் உதவுங்கரங்கள் நலன்புரிச்சங்கத்தின் உதவியால் நேற்று (19) வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கொக்குவில் வட்டார மாநகரசபை உறுப்பினர் ரகுநாதன், எமக்காக நாம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தீபாகரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

No comments: