News Just In

2/20/2020 04:58:00 PM

பேராதனை பல்கலைக்கழகம் சிறந்த பல்கலைக்கழகமாக டைம்ஸ் கல்வி நிறுவனத்தினால் தெரிவு


உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களுள் பேராதனைப் பல்கலைக்கழகம் உள்வாங்கப்பட்டுள்ளது. டைம்ஸ் உயர் கல்வி புதிய தரப்படுத்தலுக்கு அமைவாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரப்படுத்தலுக்கு அமைவாக இலங்கையில் சிறந்த பல்கலைக்கழகமாக இது பெயரிடப்பட்டுள்ளது.

உலகில் உள்ள 30 ஆயிரம் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய வகையில் டைம்ஸ் கல்வி நிறுவனம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 5 பிரிவுகளின் கீழ் இதற்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

கற்பித்தலுக்கான சூழல் மற்றும் கற்பித்தல் ஆய்வுகளின் தாக்கம், பணியாளர் சபை விஞ்ஞானம் மற்றும் ஆய்வுக்காக உள்ள சர்வதேசத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுதல் மற்றும் வர்த்தக சந்தைப் பெறுமதி உள்ளிட்டவை இதில் அடங்குகின்றன.

No comments: