கொரோனா வைரஸ் தொற்று குறித்து முதலில் எச்சரித்த வுகான் மத்திய மருத்துவமனையின் மருத்துவர் லீ வென்லியாங் (34 வயது) கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இறந்தார் என வுஹான் சிட்டி மத்திய மருத்துவமனை தெரிவித்துள்ளது.
SARS ஐப் போலவே தோன்றியதாகக் கூறப்பட்ட ஒரு வைரஸ் தொற்று குறித்து டிசம்பர் 30 ஆம் திகதி தனது மருத்துவப் பள்ளி வகுப்பு தோழர்களின் வட்டத்தை எச்சரித்ததை அடுத்து, காவல்துறையினரும் மற்றவர்களும் டாக்டர் லி யை விசாரித்தனர். அவரது எச்சரிக்கையை ஆதாரமற்ற மற்றும் சட்டவிரோத வதந்தி என்று கண்டித்து ஒரு அறிக்கையில் கையெழுத்திட காவல்துறை அவரை கட்டாயப்படுத்தியது.
மருத்துவர் லீ வென்லியாங்கினை காப்பாற்ற இன்னும் போராடுவதாக மருத்துவமனை கூறி இருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
மருத்துவர் தனது சமூக வலைத்தளத்தில் ஜனவரி பத்தாம் திகதி நான் இருமத்தொடங்கினேன்,அதற்கு இரண்டு நாட்களிற்கு பின்னர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன், அதன் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் என பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments: