News Just In

2/20/2020 03:02:00 PM

கள்ளக் காதலால் வந்த வினை-தாய் கொலை, மகள் படுகாயம்


கள்ளக் காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினையில் கத்திக்குத்துக்கு இலக்கான தாயொருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன் அவரது மகள் கத்திக்குத்துக் காயங்களுடன் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதுளை லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த கிவுலேகம என்ற கிராமத்தில் நேற்று மேற்படிச் சம்பவம் இடம்பெற்றது.

இச் சம்பவம் குறித்து லுணுகலைப் பொலிசாருக்கு தகவல் கிடைத்து அரை மணித்தியாலங்களுக்குள் கொலையாளி கொலைக்குப் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த கத்தியுடன் லுணுகலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கத்திக்குத்து சம்பவத்தில் ஆர். எம். சோமாவதி என்ற 74 வயதுடைய தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன். அவரது மகள் கத்திக்குத்துக் காயங்களுடன், பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப்படுத்தப்பட்டுள்ளார்.

இவ்விருவரையும் கத்தியால் குத்தி ஒருவரைக் கொலை செய்து மற்றவரை கடுங்காயங்களுக்குள்ளாக்கிய நபர் சம்பவத்திற்குப் பயன்படுத்திய கத்தியுடன், காட்டிற்குள் சென்று நஞ்சு அருந்தி தற்கொலை செய்ய முயன்ற போதிலும் பதட்டத்தால் நஞ்சு போத்தல் கீழே விழுந்து உடைந்ததினால் தற்கொலை முயற்சி பயனளிக்கவில்லை.

இச்சம்பவம் குறித்து லுணுகலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலையடுத்து அவர் தலைமையில் பொலிசார் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டதுடன் தேடுதலை நடத்தி அரை மணித்தியாலத்திற்குள் மறைந்திருந்த கொலையாளியைக் கைது செய்ததுடன் இரத்தம் தோய்ந்திருந்த கத்தியையும் மீட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர் லுணுகலைப் பகுதியின் கிவுலேகம கிராமத்தைச் சேர்ந்த 54 வயது நிரம்பிய நபரென்;று பொலிசார் தெரிவித்தனர்.

வைத்தியசாலையில் கத்திக்குத்துக் காயங்களுடன் சிகிச்சைக்குப்படுத்தப்பட்டிருக்கும் பெண்ணுடன், கைது செய்யப்பட்ட நபர் கள்ளக் காதல் கொண்டிருந்தமையும் இதனைப் பலியான தாய் எதிர்த்து வந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கொலையாளி விசாரணைகளின் பின்னர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிசார் தெரிவித்தனர்.

கத்திக்குத்தில் பலியான பெண்ணின் சடலம் லுணுகலை அரசினர் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments: