(படுவான்கரை நிருபர்)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை-முனைக்காடு பிரதேசத்தில் இரு சிறுவர்களுக்கு இடையிலான சிறு முரண்பாடு குடும்பத்தகராறாக மாறி ஒரு சிறுவனின் தந்தை மற்றைய சிறுவனின் தந்தை, தாயை தாக்கியதில் அவர்கள் இருவருக்கும் தலையில் பலத்த காயத்துடன் நேற்று (07) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவது இரு சிறுவர்களும் விளையாட்டில் ஏற்பட்ட சிறு முரண்பாடு குடும்ப உறுப்பினர்களிடம் செல்ல அதில் குறித்த ஒரு சிறுவனின் தந்தை தன்னுடன் சில நபர்களை கூட்டிக்கொண்டு தன்னுடைய மகனுடன் முரண்பட்ட மற்றைய சிறுவனின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த சிறுவனின் குடும்ப உறுப்பினர்களை தாக்கியுள்ளார்.
இதில் பல வெட்டுக்காயங்களுக்கு உள்ளான குறித்த சிறுவனின் தாய் மற்றும் தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: