News Just In

2/16/2020 05:59:00 PM

ஆரையம்பதியில் பதட்டம்! மதுபோதையில் காரில் பயணித்தவர்களால் ஏற்பட்ட விபத்து!

ஆரையம்பதியில் சற்று முன்னர் ஏற்பட்ட விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மாலை 4:30 மணிவேளையில் ஆரையம்பதி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளுடன் கார் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆண் மற்றும் பெண் இருவரும் காயமடைந்துள்ளனர்.

பொத்துவில் அறுகம்பையில் இருந்து திருகோணமலைக்கு காரில் பயணித்த இளைஞர்கள் காரின் முன்னே பயணித்தவர்களை இடித்து தள்ளியதில் இவ் விபத்து ஏற்பட்டதாகவும், காரில் பயணித்தவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் விபத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை இடித்து தள்ளியதால் அவ் இடத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணையினை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.







No comments: