2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவின் உதவியில்லாமல் யுத்தத்தை நிறைவு செய்திருக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமான இந்துஸ்தான் ரைம்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் அளித்தது. இந்தியாவும் எமக்கு உதவி செய்தது. எனினும் நாங்கள் அதை பகிரங்கப்படுத்தவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இலங்கையில் நிலவிய 30 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உதவின.
விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தில் இந்தியாவின் உதவி இன்றி நாங்கள் வெற்றி பெற்றிருப்போம் என நினைக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: