News Just In

2/09/2020 09:10:00 PM

மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் இடம்பெற்ற மாணவர் மன்ற நிகழ்வு


மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க மாணவர் மன்ற நிகழ்வுகள் இன்று (09) கல்லடி, நொச்சிமுனை சிவநேசராசா மண்டபத்தில் மாணவி க.ஜகனியா தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, மங்கல விளக்கேற்றல், மாணவர்களின் கலை நிகழ்வுகள் மற்றும் அதிதிகள் உரை என்பன இடம்பெற்றன. வரவேற்பு உரையினை மாணவர் மன்ற செயலாளர் பரிதனா நிகழ்த்தினார்.

பிரதம அதிதியாக கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் பேச்சியம்மன் ஆலய தலைவர் எஸ்.சந்திரகுமார் அவர்களும்,  அதிதிகளாக கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் எஸ்.தேவசிங்கன், கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர்  என்.ஜோதிராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரிசையில் சிறப்பு உரையினை கல்வி அபிவிருத்திச் சங்க தலைவர் என்.ஜோதிராஜா ஆற்றியதுடன், மாணவர் மன்றத்தில் அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகள் தொடர்பாக விமர்சன உரையினை ஒய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.புனிதசுந்தரம் வழங்கியிருந்தார்.

மாணவர்களின் கலை நிகழ்வுகளின் நிறைவில் மாணவர் மன்ற பொருளாளர் மாணவி பிரேமிகா அவர்களால் நன்றியுரை ஆற்றப்பட்டு நிகழ்வுகள் இனிது நிறைவடைந்தன.

சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றார்கள் என பலரும் கலந்து கொண்டு மாணவர்களின் நிகழ்வினை கண்டுகளித்தனர்.  

 





 
 



No comments: