News Just In

2/03/2020 03:27:00 PM

கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி பரிதாப உயிரிழப்பு!


யாழ்ப்பாணம், அச்சுவேலி வல்வைப் பகுதியில் வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன் ஜெகதீஸ்வரன் அட்சயா (வயது 5) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.

வெளி முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமற்போயுள்ளார். வீட்டில் இருந்தவர்கள் சிறுமியைத் தேடியபோது பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்துகாணப்பட்டார்.

உறவினர்கள் சிறுமியை மீட்டு அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

இந்தச் சிறுமி கடந்த மழைக்காலத்தின் போது கிணற்றில் வீழ்ந்த நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு காப்பாற்றப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: