தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான மக்களை அறிவூட்டும் நிகழ்வு இன்று மட்டக்களப்பு பதுளை வீதியில் உள்ள கோப்பாவெளி கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வழிகாட்டலில் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்த குறித்த கருத்தரங்கில் மாவட்டத்தில் குறிப்பாக தேசிய பௌதீக திட்டமிடல் எவ்வாறு மக்களுக்கான நலன் பிரதிபலன்கள் அதில் ஏற்படும் தீமைகள் தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டுமக்களின் இது தொடர்பான கருத்துக்களும் கண்டறியப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு மே மாதம் 26ம் திகதி தேசிய பகுதிகள் திட்ட திணைக்களம் தாபிக்கப்பட்டது திணைக்களத்தின் பணியாக இருப்பது தேசிய கொள்கைத் திட்டங்கள் மற்றும் உபாயங்கள் தயார் செய்து பூமியை மற்றும் அரசியல் பொருளாதார சமூக பகுதிகள் மற்றும் சுற்றாடல் அம்சங்களை ஒன்றிணைத்து விருத்தி செய்தல்.
மற்றும் உரிய முறையில் சரி செய்யும் நோக்குடன் அதுபோன்ற தேசிய கொள்கை மற்றும் திட்டங்களை பழைய மற்றும் தேசிய விருது உறுதி செய்தல் மற்றும் செயல்படுத்தல் போன்றவையாகும்.
குறிப்பாக இது போன்ற திட்டங்கள் கிராமப்புறங்களில் உள்ள மீனவ விவசாய சாதாரண மக்களை ஒரு பாரிய பொருளாதாரத்துக்குள் முடக்குவதாக இதன் விளைவாக மக்களது அன்றாட வாழ்க்கையில் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் இருப்பதன் காரணமாக
இதனுடைய நன்மை தீமைகள் குறிப்பாக பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்கள் இவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் தேசிய புதிய திட்டத்தின்படி உருவாக்கப்படும் வடக்கு மற்றும் வட மத்திய மா நகரங்களுக்கு நீரைப் பெற்றுக் கொடுப்பதற்காக மொரகந்த மற்றும் களுகங்கை நீர்ப்பாசன திட்டங்கள் காரணமாக 2500 குடும்பங்கள் நேரடியாக இடம்பெயர்ந்து சென்றுள்ளனர்.
தேசிய பௌதீக திட்டமிடல் திட்டத்தின் பிரகாரம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய மாகாண அதிவேக நெடுஞ்சாலை காரணமாக குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து சென்ற பாரியளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.
மலைகளை வெட்டி மண்ணை பெற்றுக்கொள்ளல் உட்பட அதிக அளவில் வயல் நிலங்கள் நிரம்பி கட்டுப்படுத்துவதன் காரணமாக அவற்றை சுற்றி வாழும் மக்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் .
ஆகவே குறித்த தேசிய பௌதீக திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வு கிராம மட்டங்களில் சென்றடைய வேண்டும் என்பதற்காக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் எடுக்கும் இந்த நடவடிக்கையானது அடிப்படை வசதிகள் இன்றி வாழும் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்காக குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: