-லியோன்-
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் நேற்று (31) பிற்பகல் நடைபெற்றது
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டிக்களி தமிழ் வித்தியாலயத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான " செயற்பட்டு மகிழ்வோம் " விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல் பாடசாலை மைதானத்தில் அதிபர் சகஸ்ரநாமம் தலைமையில் நடைபெற்றது
ஆரம்ப நிகழ்வாக பாடசாலையின் நுழைவாயில் பாடசாலை பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .
தொடர்ந்து அதிதிகளினால் தேசிய கொடி, பாடசாலை கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, சத்திய பிரமாண நிகழ்வுகளுடன் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது .
விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ,வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது.
2020 ஆம் ஆண்டு செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது..
இந்த விளையாட்டு போட்டி நிகழ்வில் விருந்தினர்களாக ஆசிரியர் ஆலோசகர் ஆரம்பக் கல்வி பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளர் திருமதி . ஐ .இந்திரகுமாரன் , ஆசிரியர் ஆலோசகர் ஆரம்பக் கல்வி திருமதி.எஸ்.பூபாலசிங்கம் மற்றும் நிகழ்வில் அண்மித்த பாடசாலைகளின் அதிபர்கள் , கிராம சமுர்த்தி உத்தியோகத்தர் ,பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
2/01/2020 08:45:00 AM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டுப் போட்டி நிகழ்வு
மட்டக்களப்பு மட்டிக்களி தமிழ் வித்தியாலய "செயற்பட்டு மகிழ்வோம்" விளையாட்டுப் போட்டி நிகழ்வு
Subscribe to:
Post Comments (Atom)

















No comments: