News Just In

1/16/2020 12:24:00 PM

அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பஸ்கள் குறித்து அதிரடியாக மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை


அதிக ஒலியுடன் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளை இணங்காணும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் சகல பஸ் வண்டிகளையும் பரிசீலிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாராகியுள்ளதாக தகல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறு அதிக ஒலி எழுப்பும் வகையில் பாடல்களை ஒலிக்கச் செய்யும் பஸ் வண்டிகள் தொடர்பில் முறையிடுவதற்கு 1955 என்ற பயணிகள் போக்குவரத்து ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.

No comments: