News Just In

1/16/2020 02:53:00 PM

வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வு


(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் தேசிய நிகழ்வு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையின் முதல்வர் திருமதி. கரண்னியா சுபாகரன் தலைமையில் இன்று வியாழக்கிழமை(16)காலை 8.45 மணியளவில் பாரம்பரிய கலைநிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் ஆரம்பக்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஆர்.பாஸ்கரனும்,சிறப்பு அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி எல்.பிரசாந் மற்றும் பிரதியதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவிகள்,பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது முதன்மை அதிதிகளாக தரம் ஒன்று மாணவிகளை தரம் இரண்டு மாணவிகள் மாலை அணிவித்து வரவேற்பதையும்,மாணவிகளின் கலைநிகழ்வுகள் இடம்பெறுவதையும் படத்தில் காணலாம்.








No comments: