News Just In

1/18/2020 05:00:00 PM

கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்திலிருந்து டைனமைற் வெடிபொருட்கள் மீட்பு!

கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்திலிருந்து டைனமெற் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது...
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் உள்ள சோதனை சாவடியில் நேற்று இரவு 7 மணியளவில் தனியார் பேருந்தொன்றை வழிமறித்த இராணுவம் உரிமை கோரப்படாமலிருந்த பொதியினை பரிசோதனை மேற்கொண்டபோது 51 ஜெலிக்னைற் வெடிமருந்து குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவற்றை மீட்ட இராணுவத்தினர் குறித்த வெடிமருந்து குச்சிகளை கொண்டு வந்த குற்றச்சாட்டில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட ஜெலிக்னைட் வெடிமருந்து குச்சிகளும், கைது செய்யப்பட்ட இருவரும் செட்டிகுளம் பொலிசாரிடம் ஓப்படைக்கப்பட்டுள்ளதுடன், தனியார் பேருந்தும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

No comments: