சட்ட விரோதமான முறையில் மட்டக்களப்புக்கு சங்குகள் சிலவற்றை கடத்திய கொழும்பைச் சேர்ந்த நபரை இன்று சனிக்கிழமை காலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட முகம்மது பாறூக் முகம்மது சல்மான் எனும் சந்தேக நபர் கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்தவரெனவும், இவர் குறித்த சங்குகளை வியாபாரத்திற்காக கொண்டுவந்துள்ளாரெனவும் விசாரணைகளில் இருந்து தெரியவருகின்றது.
கல்லடி பாலத்தின் அருகில் காவல் கடமையில் நின்ற பொலிசார் பெட்டியொன்றுடன் சென்ற குறித்த நபரை விசாரணை செய்தபோது பெட்டியில் சட்ட விரோதமான முறையில் வைத்திருந்த சங்குகளை கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.குமாரசிறி, மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹெட்டியராச்சி ஆகியோரின் பணிப்பின் பேரில் ஐ.பி.பண்டார தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று கைப்பற்றப்பட்ட சங்குகள் மற்றும் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)



No comments: