News Just In

1/10/2020 10:52:00 AM

வீரமுனையில் கிழக்கு மாகாண ஆளுனரால் பல அபிவிருத்தித் திட்டங்கள் திறந்துவைப்பு

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித்திட்டங்களை திறந்து வைத்தார்.

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் தனித்துவிடப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீதிகள், வடிகான்கள், தடுப்புச்சுவர் அடங்கிய அபிவிருத்தித்திட்டங்களையே கிழக்கு மாகாண ஆளுனர் திறந்து வைத்தார்.

வியாழக்கிழமை (09.01.2020) காலை நடைபெற்ற இந் நிகழ்வில், 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களான, வீரமுனை - மில்லடி வீதி, வீரமுனை குறிஞ்சா முனை வீதி, வீரமுனை மைதான வடிகான், அலவாக்கரை வீதி வடிகான், வீரமுனை கண்ணகி வீதியின் தடுப்புச் சுவர் ஆகியன திறந்து வைக்கப்பட்டன.

நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத், உப தவிசாளர் வி.ஜெயச்சந்திரன், மற்றும் உறுப்பினர்கள், முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ.அசீஸ், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.அப்துல் லத்திப், பிரதேச செயலாளர் எம்.முசமில், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ராபி, அற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வீரமுனை சிந்தா யாத்திரைப்பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யகம்பத் வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

No comments: