News Just In

1/17/2020 09:19:00 PM

கரடியனாறு கிராமத்தில் இடம்பெற்ற பொங்கல் பெருவிழாவும், உதவி வழங்கல் நிகழ்வும்

மட்டக்களப்பு மாவட்ட தாயக நண்பர்கள் வட்டம், சுசிலன் பவுண்டேசன் நிறுவனம் மற்றும் மாவட்ட இளைஞர் கழக சம்மேளனம் ஆகியன இணைந்து வியாழக்கிழமை (16.01.2020) மண் மணம் மாறாத அழகிய கிராமமான கரடியனாறு கிராமத்தில் மாபெரும் "மண் மணம் வீசும்" பொங்கல் பெருவிழாவினையும், உதவி வழங்கல் நிகழ்வினையும் மக்கள் பங்களிப்புடன், வெகுவிமர்சையாக நடாத்தியிருந்தனர்.

இவ்விழாவில் தமிழரின் பாரம்பரிய முறைகளுடன் 07 பானைகளில் பொங்கல் செய்யப்பட்டதுடன், இறைவழிபாடுகளும் இடம்பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து 40 தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டதுடன், இவ்வருடம் இக் கிராமத்திலிருந்து க.பொ.த (உ/த) தோற்றி, சிறந்த பெறுபேற்றைப்பெற்ற மாணவியொருவரும் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் தாயக நண்பர்கள் வட்டத்தின் ஆலோசகர்கள், இணைப்பாளர்கள், சுசிலன் பவுண்டேசன் நிறுவனத்தினுடைய உபதலைவர், இணைப்பாளர்கள், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர், உறுப்பினர்கள்,

இளைஞர் பாராளுமன்றத்தின் முன்னாள். கல்வி அமைச்சர். திரு. ம. சுரேஸ்காந்தன், கரடியனாறு கிராம அபிவிருத்திச்சங்க தலைவர், உறுப்பினர்கள், கரடியனாறு பிரதேசமட்ட இளைஞர் கழக சம்மேளனத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களென பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

No comments: