19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான உலக கிண்ண கிரிக்கட் தொடர் தென்னாபிரிக்காவில் நேற்று (17) ஆரம்பமானது.
இளைஞர் உலக கிண்ண கிரிக்கட் போட்டி ஒன்று அந்த நாட்டில் 22 வருடங்களுக்கு பின்னர் தென்னாபிரிக்காவில் நடைபெறுகின்றது.
இதில் 04 பிரிவுகளில் 16 குழுக்கள் கலந்து கொள்கின்றன. இலங்கை இந்த போட்டியில் ஏ பிரிவில் போட்டியிடுகின்றது. இதில் இந்தியா, நியூஸிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் அணிகள் இடம்பெற்றுள்ளன.
இளைஞர் உலக வெற்றிக்கிண்ண கிரிக்கட் போட்டி வரலாற்றில் வெற்றிக் கிண்ணத்தை இந்திய அணியே பல முறை கைப்பற்றியுள்ளது. 2000, 2008, 2012, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இளைஞர் போட்டிக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. அவுஸ்ரேலியா 3 சந்தர்ப்பங்களிலும், பாகிஸ்தான் 2 சந்தர்ப்பங்களிலும் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளன.
தென்னாபிரிக்க மேற்கு இந்திய தீவுகள் அணி மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒவ்வொன்றும் ஒருமுறை கிண்ணத்தை கைப்பற்றியது. இலங்கை அணி இது வரையில் இளைஞர் உலக வெற்றிக்கிண்ண போட்டியில் வெற்றிபெறவில்லை.
1/18/2020 07:51:00 AM
19 வயதிற்கு உட்பட்ட உலக கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் ஆரம்பம்
Subscribe to:
Post Comments (Atom)


No comments: