
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வசதிகளின்றி தற்காலிக இடத்தில் கஷ்டத்துடன் வியாபாரத்திலீடுபடும் சந்தை வியாபாரிகளை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் செவ்வாய்க்கிழமை 10.12.2019 நேரில் சென்று சந்தித்து குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டதாக ஏறாவூர் சந்தை வியாபாரிகள் தெரிவித்தனர்.
கன மழையினாலும் வெள்ளத்தினாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் சந்தை வியாபாரிகளும் உள்ளடங்குவதாக முன்னாள் முதலமைச்சரின் ஏறாவூர் அலுவலகம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட சந்தை வியாபாரிகளது வர்த்தக நடவடிக்கைகள் குறித்து முன்னாள் முதலமைச்சர் சந்தை வியாபாரிகளைச் சந்தித்துக் கேட்டறிந்து கொண்டதுடன், ஏறாவூர் பொதுச் சந்தைப் புதிய கட்டிட விடயங்கள் சம்பந்தமான முன்னேற்றங்கள் பற்றியும் கருத்துப் பகிர்ந்து கொண்டார்.
எவ்வாறேனும், ஏறாவூர் நவீன சந்தைக் கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டதும் ஏறாவூர் சந்தை வியாபாரிகளுக்கு விமோசனம் கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
No comments: