றோயல் பார்க் கொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக விளக்கமளிக்க, நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமன்னிப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் வழக்கில் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பெயரிடப்பட்ட நிலையிலேயே இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அவர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும்.
இதேவேளை றோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஷிரமந்த அன்டனி ஜயமஹவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் நவம்பர் 15 ஆம் திகதியே சிறப்பு கடவுசீட்டை பெற்றுக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என நீதிமன்றில் சட்டமா அதிபர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, அவர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருவதாகக் கூறினார்.
No comments: