News Just In

12/10/2019 02:20:00 PM

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

மகளிர் சிறுவர் மற்றும் உலர்வலய அமைச்சின் சிறுவர் செயலகத்தின் ஊடாக கிழக்கு மாகாண பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் முன்பிள்ளைப்பருவ உத்தியோகத்தர்களுக்கான வான்மை விருத்தி செயலமர்வு. இன்று 10.12.2019 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

முன் பிள்ளைப்பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வுக்கு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் அவர்களின் தலைமை தாங்கினார்,

மட்டக்களப்பு மாவட்ட முன்பிள்ளை பருவ இணைப்பாளர் திரு.வீ.முரளிதரன் அவர்களின் ஒருங்கிணைப்புடன் இப் பயிற்சி நெறிக்கான வளவாளராக Dr.ஜுடி அவர்கள் கலந்து கொண்டார்.

கிழக்கு மாகாணத்தின் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றுகின்ற முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் களத்தில் கடமையிைனை மேற்கொள்கின்ற போது ஏற்படுகின்ற சவால்களை எவ்வாறு எதிர்கொண்டு வினைத்திறனுடன் கடமையாற்றுவது தொடர்பான பயிற்சி செயலமர்வாக இது அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments: