News Just In

12/10/2019 02:31:00 PM

இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்-ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்


இந்தியாவில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்களுக்கும், மத்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 35 ஆண்டுகளாக, இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வந்த சுமார் ஒரு லட்சம் பேர் இந்தியாவில் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அவர்களையும் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

No comments: