நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலைக் காரணமாக மகாவலி ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் திருகோணமலை மற்றும் பெலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் வெலிக்கந்தை, கிண்ணியா, மூதூர், சேருவிலை மற்றும் கந்தளாய் போன்ற பிரதேச செயலகங்களில் வாழும் மக்களையும், பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர, தமன்கடுவை, மெதிரிகிரியை மற்றும் திம்புலாகலை போன்ற பிரதேச செயலகங்களில் வாழும் மக்களுக்கே இந்த அறிவிப்பு விசேடமாக விடுக்கப்பட்டுள்ளது.

No comments: