இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார் இதன் போது கருத்து தெரிவித்த பூ.பிரசாந்தன்
கிழக்கு மாகாண மக்கள் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு, ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தங்களது ஆயுதமாக கல்வியை கையில் எடுத்து முன்னோக்கி செல்லுகின்றனர். இக்காலத்தில் அவர்களது கல்வியினை தடுக்கும் பொருட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது கண்டிக்கத்தக்கது. இம் மக்களது வாக்கினைப் பெற்று பாராளுமன்றம் சென்ற இவர்கள். அவர்களது குறைந்த அதிகாரத்தினைக் கூட பயன்படுத்த முடியாத வகையில் தமிழ் மக்களை உண்டுபண்ணியுள்ளனர்.
இதில் 2020 இல் அமுலுக்கு வரும் வகையில் கல்விப்பணிப்பாளர்கள் 36 பேரை இடமாற்றம் செய்வதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த இடமாற்றத்தினை நிறுத்தக் கோரி ஆளுநருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இலங்கையில் உள்ள 99 கல்வி வலயங்களில் கடைசியாக இருந்த கல்குடா கல்வி வலயத்தினை அதன் கல்வி பணிப்பாளர் ரவி அவர்கள் 88 ஆக முன்னுக்கு கொண்டு வந்தார். அதுமாத்திரம் இல்லாது சாதாரணதரம், புலமைப் பரிசில் பரீட்சசைகளில் மாணவர் சித்தியடையும் வீதத்தினை அதிகரித்தார், உயர்தரத்தில் 7 - 23 மாணவர்கள்தான் விஞ்ஞானப் பிரிவில் கறறார்கள் அதனை 250 ஆக மாற்றியுள்ளார்.
இவ்வாறு கல்வியின் அபிவிருத்திக்காக பாடுபட்ட ரவி அவர்கள் தன்னுடன் சேர்ந்து போகவில்லை என்று அப்பகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தனது சொந்த கடிதத்தில் அவரை இடமாற்றம் செய்யக் கோரியுள்ளமை கிழக்கு மக்களின் கல்வியில் கூட்டமைப்பு உறுப்பினர்களின் கீழ்த்தரமான செயலைக் காட்டுகின்றது.
தற்போதைய காலத்தில் உத்தியோகத்தர்கள் இடமாற்றப்பட்ட பின்னர் குறித்த இடத்திற்கு பதிலாக இன்னொரு உத்தியோகத்தர் வழங்கப்படாத நிலை காணப்படுகின்றது. உதாரணமாக திருக்கோவில், கிண்ணியா வலயங்களில் வலயக் கல்வி பணிப்பாளர்கள் வழங்கப்படவில்லை,
அதே போன்று மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் கடமையாற்றிய 128 ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டனர். பதிலுக்கு அங்கு 28 ஆசிரியர்களே வழங்கப்பட்டனர். மிகுதி 100 ஆசிரியர்கள் வழங்கப்படவில்லை, தலைவர் சந்திரகாந்தனால் உருவாக்கப்பட்ட கல்வி வலயம் அது , பின்தங்கிய மக்களைக் கொண்ட அப்பகுதி மக்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கிழக்கு மக்களின் கல்வியை பறிப்பதே தமித் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் வேலையாக உள்ளது. அதிலும் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பிள்ளையானின் குறைகளைக் கூறுவதையே வழக்கமாக்கி வைத்துள்ளார்,
எங்களைப் பற்றி பேசவா மக்கள் இவர்களைப் பாராளுமன்றம் அனுப்பினார்கள். மக்களின் பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்காகத்தானே அனுப்பினார்கள். இவர்களை போன்று காழ்ப்புணர்ச்சி அரசியல் செய்பவர்களால் மக்களின் அபிவிருத்தி தடைப்படுகிறது, கௌரவ யோகேஸ்வரன் மக்களுக்கு வழங்கப்பட்ட நிதியினை திருப்பி அனுப்பியதுடன், மக்களின் நலனுக்கு எதிராகவே செயற்படுகின்றார்.
இவ்வாறு கிழக்கு மக்களின் கல்வியை தடுக்கும் தமித் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு கண்டிக்கத்தக்கது எனவும் இந்த 36 இடமாற்ற நியமனங்களின் இடை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

No comments: