News Just In

12/10/2019 12:30:00 PM

ஜனாதிபதி பெயரை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது


ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பு உள்ளதாக தெரிவித்து அரச நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றவியல் பிரிவினரால் நேற்று (09) குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ராஜாங்கனை மற்றும் செவனகல பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம பிரதேசத்தில் வசித்து வரும் பெண் ஒருவரிடம் ஒன்றரை இலட்சம் ரூபாவினை பெற்ற போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான மோசடியாளர்களுக்கு ஏமாற வேண்டாம் என ஜனாதிபதி செயலகம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

No comments: