கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை ஐந்து புள்ளிகளை பெற்று முன்னிலை அடைந்துள்ளமை விசேட அம்சமாகும்.
189 நாடுகளில் குழந்தை பிறப்பின் போது எதிர்பார்க்கப்படும் ஆயுற்காலம், எதிர்பார்க்கப்படும் கல்வி, தனிநபர் வருமானம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த குறிக்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் மாலைத்தீவு 104 ஆவது இடத்திலும், இந்தியா 129 ஆவது இடத்திலும், பூட்டான் 134 ஆவது இடத்திலும், பங்களாதேஷ் 135 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 152 ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 170 ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை மக்களின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் 76 தசம் 8 ஆக காணப்படுவதோடு அது தெற்காசிய பிராந்தியத்தில் அதிகமாக ஆயுட்காலமாகும்.
இந்த மனித அபிவிருத்தி குறிக்காட்டியில் நோர்வே முதலிடத்திலும், சுவிட்சர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடத்திலும் உள்ளன.
No comments: