News Just In

12/10/2019 11:09:00 AM

கிண்ணியா ஆற்றில் மாயமான இருவரின் சடலங்கள் மீட்பு


திருகோணமலை – கிண்ணியா மகாவலி கங்கையில் காணாமல்போன மீனவர்கள் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இரு சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியில் மஹாவலி கங்கையில் படகொன்று கவிழ்ந்ததில் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையிலேயே இன்று காலை சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

அத்தோடு சடலங்களை கிண்ணியா தளவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிபடத்தக்கது.

No comments: