News Just In

12/10/2019 12:45:00 PM

மட்டக்களப்பில் கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தினால் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில், கிராமிய அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இயங்குகின்ற மாதர் அபிவிருத்தி பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தினை 2018 ஆம் ஆண்டு பூர்த்தி செய்த மற்றும் டிப்ளமோ சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான 50 வீதம் மானிய அடிப்படையில் தையல் இயந்திரங்களை வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு மோகன் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் U.L.A அசீஸ் அவர்கள் கலந்து கொண்டார். விஷேட அதிதிகளாக கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்களும் கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளரும் முன்னாள் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார் அவர்களும் தலைமை காரியாலய சிரேஷ்ட கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர் பத்மராஜா அவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றுகின்ற கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், தையல் போதனாசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர்.












No comments: