தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பதுளை-பஸ்ஸரை வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. எனினும் சாரதிகளை மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மண் மேடு சரிந்து விழுந்ததன் காரணமாக பதுளை-பஸ்ஸரை வீதி தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே மீண்டும் குறித்த வீதி வழமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் மண் சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதால் சாரதிகள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும் என அறிவுறத்தப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பதுளை, பஸ்ஸர பிரதேசத்தில் வெல்கொல்ல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மண்சரிவினால் முழுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: