News Just In

12/21/2019 09:39:00 AM

பிள்ளையானை விடுதலை செய்யுமாறு மஹிந்தவிடம் கருணா கோரிக்கை


கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானை விடுதலை செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாசார மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மக்களுடன் மாபெரும் கலந்துரையாடலில் ஈடுபட்ட பின்னர், பொதுமகன் ஒருவரால் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், “திருகோணமலையில் எங்கள் கட்சியின் கட்டமைப்பு முன்னெடுக்கப்படுகிறது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலைக்கு பல முயற்சிகளை மேற்கொள்பவன் நான். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பதுதான் எனது இலக்கு” என குறிப்பிட்டார்.

No comments: