News Just In

12/10/2019 09:08:00 PM

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்த சண்முகநாதன் மகேந்திரநாதன்


-சதீஸ்-
புதுநகரைச் சேர்ந்த சண்முகநாதன் மகேந்திரநாதன் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சையில் பிறந்து தற்போது மட்டக்களப்பு - புதுநகரில் வசிக்கும் சண்முகநாதன் மகேந்திரநாதன் அவர்கள் இலங்கை தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் அண்மையில் சத்தியபிரமானம் செய்து கொண்டார்.

இவர் தற்போது மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்துவருகின்றார்

சமூக சேவையில் ஈடுபாடு கொண்டு ஓரு தொண்டு அமைப்பினை ஸ்தாபித்து அதனூடாக நண்பர்களை இணைத்துக்கொண்டு. பல ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக உதவி புரிந்து வருகின்றார்.

மேலும் இவர், விளையாட்டு கழகங்கள் கிராமிய அமைப்புக்கள் கோயில் நிருவாக அமைப்பு போன்றவற்றில் பல பதவிகளை வகித்தவர் ஆவார்.

மகேந்திரநாதனின் வளர்ச்சியில் அவரது தாயாரான மனோன்மணி அவர்களின் பங்கு அளப்பரியதாகும்.

No comments: