News Just In

12/16/2019 02:29:00 PM

திராய்மடு பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு


(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திராய்மடு கிராமத்தில் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பினால் ஞாயிற்றுக்கிழமை (15) பிற்பகல் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

திராய்மடு - சுவிஸ்கிராமம் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட மழை வௌ்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒரு தொகுதி மக்களுக்கு இதன்போது மேற்படி தேசிய மக்கள் முன்னேற்றம் எனும் அமைப்பினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு - தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பின் உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்படி நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவருகின்றனர்.

இந் நிகழ்வில் கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் தேசிய மக்கள் முன்னேற்றம் அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










No comments: