தெற்கு அதிவேக வீதியின் வெலிப்பன்ன – குறுந்துகஹஹெத்தெம்ம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு இருவர் காயமடைந்துள்ளனரென பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (திங்கட்கிழமை) இரவு காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வான் கொள்கலன் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் மூவர் இந்தியப் பிரஜைகளென பொலிஸார் தெரிவித்தனர். விபத்து நடந்த நேரத்தில் 6 இந்தியர்கள் வானில் பயணித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமியும் பலத்த காயமடைந்த மற்றொரு நபரும் கராபிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: