News Just In

12/21/2019 11:24:00 PM

ஏறாவூர்பற்று வெள்ள மீட்பு பணியில் உழவு இயந்திரம் குடை சாய்ந்து நீரில் மூழ்கிய உத்தியோகத்தர்



(ஏ.எச்.ஏ. ஹுஸைன்) 
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாதுறு ஆறு பெருக்கெடுத்ததையடுத்து ஏற்பட்ட வெள்ள அனர்த்ததத்தினால் தேசிய அனர்த்த முகாமைத்துவப்பிரிவினர் மீட்புப்பணிக்காக சென்று கொண்டிருந்த போது மாவடியோடை பாலத்தை நீர் பெருக்கெடுத்ததையடுத்து இயந்திரப்படகுகினை உழவு இயந்திரம் மூலமாக ஏற்றி சென்ற வேளையில் குறித்த மாவடியோடை ஊடாக பெருக்கெடுத்த நீரில் உழவு இயந்திரத்தை குடை சாய்ந்து அதில் பயணம் செய்த தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர் நீரில் முழ்கி அதிஸ்டவசமாக காப்பாற்றப்படார்.

குறித்த சம்பவத்தில் நிரில் முழ்கிய அனர்த்த நிவாரண உத்தியோகத்தர் மொகமட் ஹசிர் ஆரம்ப சிகிச்சைக்காக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தற்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டு போதானா வைத்தியசாலையில் குறித்த உத்தியோகத்தர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார் .அவரின் உடல்நிலை தேறிவருவதாக வைத்தியசாலை வட்டாரத்தகவல் தெரிவித்தது.



No comments: