News Just In

12/10/2019 03:17:00 PM

ஆசிரியர் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி


ஆசிரியர் தொழில் பெற்றுதருவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுப்படுவதாக தகவல்கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்திருக்கும் கல்வி அமைச்சு இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் உடனடியாக தமக்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதாவது :

இந்த மோசடிகள் தொடர்பாக கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதற்கமைய இதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு அவர் இரகசிய பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சந்தேக நபர்கள் ஆசிரிய தொழிலை பெற்று தருவதாக குறிப்பிட்டு போலி ஆவணங்களை தயார்செய்து காண்பித்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் தொகை நிதியை பெற்றுக் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேரர் ஒருவரினால் வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமையவே அமைச்சர் இரகசிய பொலிஸாரிடம் இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜாங்கனை பகுதியில் இவ்வாறு மோசடியில் ஈடுப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர்களிடம் நேற்று தினம் அமைச்சரினால் நியமன கடிதம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான தகவல்கள் அமைச்சரவை ஊடாகவே சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டுள்னதாகவும் தெரியவந்துள்ளது.அது போன்ற செயற்பாடுகள் கடந்த சில வருடங்களாகவே இடம்பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானத்துடன் இருப்பதுடன் , பொதுமக்கள் இவ்வாறான மோசடிகாரர்களின் வலையில் சிக்கிக் கொள்ளாது அவதானத்துடன் செயற்பட வேண்டும். அதேவேளை இவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

No comments: