News Just In

12/22/2019 08:06:00 AM

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,492 ஆக அதிகரிப்பு


சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26, 492 ஆக அதிகரித்திருப்பதாக இடர்முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

மூவர்; உயிரிழந்துள்ளனர். 1228 குடும்பங்களைச் சேர்ந்த 4,284 பேர் 444 இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பதாக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்களுக்குத் தேவையான வசதிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 2 தினங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை அதிக மழை காரணமாக, 42 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான 75 நீர்த்தேக்கங்களில் நீர் ; மட்டம் 84 சத வீதமாக அதிகரித்துள்ளது. 6 மாவட்டங்களில் 23 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, கண்டி, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு உட்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

No comments: