விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள 270 குடும்பங்களுக்கு தேவையான விதைகள், களை நாசினிகள், தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைசார்ந்த அறிவூட்டல்களை வழங்குவதற்கு தென் மாகாண விவசாய காரியாலயம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இத் திட்டத்திற்காக 37 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தக ரீதியான விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தி அவர்களின் பொருளாதார மட்டத்தை உயர்வடையச் செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
பத்தேகம, நாகொட, பெந்தோட்ட உள்ளிட்ட பிரதேசங்கள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
11/05/2019 11:34:00 AM
விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு துறைசார்ந்த அறிவூட்டல்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: