News Just In

11/08/2019 07:49:00 AM

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் நவம்பர் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை வியாழக்கிழமை (07.11.2019) மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.சி.ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியை சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நான்கு பெண்கள் அடங்கலாக நுவரெலியாவில் செயற்பட்ட தேசிய தௌஹீத் ஜமாஅத் முகாமில் ஆயுதப் பயிற்சி பெற்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
************
நீதிமன்றம் தொடர்பான செய்திகளுக்கு தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை VTN செய்திக் குழுமம் தடைசெய்துள்ளது என்பதனை தங்களுடைய மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்.

No comments: