News Just In

11/17/2019 02:11:00 AM

தேர்தல் முடிவுகள் தாமதமாவதன் காரணம் வெளியிடப்பட்டது


எந்தவொரு மாவட்ட தபால் மூல வாக்கு பெறுபேறும் அந்த மாவட்ட மத்திய நிலையத்திற்கு இது வரையில் கிடைக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சற்று முன்னர் தெரிவித்தார்.

விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் மேலும் தெரிவித்ததாவது.
வாக்களிப்பில் தபால் மூல வாக்குகளை எண்ணுவதற்காக 371 மத்திய நிலையங்களும், பொதுவாக வாக்குகளை எண்ணுவதற்காக 1,179 மத்திய நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தபால் மூல வாக்குகளை எண்ணும் 371 மத்திய நிலையங்களில் 103 வாக்குகளை எண்ணும் நிலையங்களில் எண்ணும் பணிகள் பூர்த்தியடைந்து அவற்றின் பெபேறுகளின் அறிக்கை மாவட்ட பெறுபேறு அலுவலகத்திற்கு கிடைத்திருப்பதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இவற்றில் 70 மத்திய நிலையங்களுக்கான பெறுபேறுகள் தற்பொழுது தேர்தல் செயலகத்திற்கு கயஒ மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்தவொரு மாவட்டத்திலும் தபால் மூல வாக்கு பெறுபேறுகள் அந்த மாவட்ட மத்திய நிலையத்திற்கு கிடைக்கவில்லை என்பதினால் இன்னும் எந்தவொரு மாவட்ட உத்தியோகபூர்வ தபால் மூல வாக்கு பெறுபேற்றை அறிவிப்பதற்கு முடியாது இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக இந்த பெறுபேறுகளை வெளியிடுவதற்கு மேலும் தாமதமாவதுடன். இதற்கு மேலதிகமாக கேகாலை மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் வந்து சேர்ந்தவை 10 மணி என்பதினால் இந்த மாவட்டத்தின் பெறுபேறு இன்றும் தாமதம் அடையும் என்றும் மஹிந் தேசப்பிரிய தெரிவி;த்தார்.

No comments: