News Just In

11/24/2019 06:51:00 PM

மட்டக்களப்பு "இளம் மொட்டுக்கள்" பாலர் பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


மட்டக்களப்பு "இளம் மொட்டுக்கள்" பாலர் பாடசாலையின் (Little Buds Montessori School) சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24.11.2019) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் பாடசாலை அதிபர் திருமதி.மிதுளா முகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், அதிதிகளாக LBMS முகாமைத்துவக் குழுவின் தலைவர் K.சிவசண்முகராஜா, மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் மேற்பார்வை உத்தியோகத்தர் V.சிவரஞ்சன், செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி K.சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை "இளம் மொட்டுக்கள்" பாலர் பாடசாலை மாணவர்களின் ஆடல், பாடல், பேச்சு நிகழ்வுகள் அலங்கரித்ததுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.



No comments: