News Just In

11/06/2019 02:46:00 PM

தேர்தல் சட்டத்திற்கு முரணான மட்டு வைத்தியசாலை நியமனங்கள் - விசாரிக்கக் கோரிய மாநகர முதல்வர்


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு Health Management Assistant பதவிக்கு  11 பேர் சுகாதார அமைச்சின் மூலமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலங்களில் நியமனங்கள் வழங்குவது சட்டத்திற்கு முரணானது என்பதை கருத்தில் கொண்டு அந்  நியமனங்கள் தொடர்பாக தகவலை  அறிந்து கொண்ட  மட்டு  மாநகர முதல்வர் தி.சரவணபவன் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இந் நியமனங்கள் தொடர்பாக அறியப்படுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

அண்மையில்  திட்டமிடல் உதவியாளர் உட்பட சில நியமனங்கள் வழங்கப்பட்டு பின்னர்  இடை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



No comments: