News Just In

11/06/2019 11:59:00 AM

வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்ல 1100 பேருந்துகள்


2019 ஜனாதிபதி தேர்தலின் போது வாக்குப் பெட்டிகளை எடுத்துக் செல்வதற்காக 1100 பேருந்துகள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அந்த சபையின் பிரதி முகாமையாளர் பி.எச்.ஆர்.டி சந்திரசிறி அத தெரண செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

அதேபோல், தேர்தல் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய குறித்த பேருந்துகளை மேற்படி நடவடிக்கைக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: