News Just In

11/06/2019 10:26:00 AM

வந்தாறுமூலை பிரதேசத்தில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான விழிப்பூட்டல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட  விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவின் ஏற்பாட்டில் வந்தாறுமூலை போதனாசிரியர் பிரிவின் கீழ் உள்ள கொம்மாதுறைத்தீவு கிராமத்தில் சோளம் பயிரில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான செய்முறையுடன் கூடிய விழிப்பூட்டல் நிகழ்வு அப்பகுதிக்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் A.அனோஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (05.11.2019) நடைபெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட வடக்கு வலய  உதவி விவசாய பணிப்பாளர் E.சுகுந்ததாசன் அவர்களும் பாட விதான உத்தியோகத்தர் S.சுதாகரன் அவர்களும் அதிதிகளாக கலந்துகொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற சோளம் பயிரில் படைப்புழு தாக்கத்தை கட்டுப்படுத்தல் தொடர்பான செய்முறையுடன் கூடிய விழிப்பூட்டல் நிகழ்வில் விவசாய திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயபோதனாசிரியர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், விவசாய திணைக்கள தொழிலாளிகள் மற்றும் குறித்த பகுதியினைச் சேர்ந்த விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: