தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வீ.சிவஞான சோதி அவர்களினால் புதன்கிழமை (06.11.2019) திறந்து வைக்கப்பட்ட்து.
நெடுந்தீவு மகா வித்தியாலயம், நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, நெடுந்தீவு மங்கயற்கரசி வித்தியாலயம், நெடுந்தீவு சிவப்பிரகாச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்த "திறன் வகுப்பறைகள்" திறந்து வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), நெடுந்தீவு பிரதேச செயலர், கோட்டக் கல்வி அலுவலர் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.
11/07/2019 10:29:00 AM
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு "திறன் வகுப்பறைகள்" கையளிக்கப்பட்டன
Subscribe to:
Post Comments (Atom)





No comments: