கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தனவின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், இலங்கை நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித்த ஹரிலால், பலிகக்கார, யுனிசெப் இன் வதிவிடப்பிரதிநிதி ரிம் சுற்றன், யுனிசெப் இன்சமூக கொள்கைகளுக்கான பிரதானி லூசி மொரேயா டனில்ஸ், கிழக்கு மாகா சபையின் பிரதிப்பிரதம செயலாளர், செயலாளர்கள், உதவிச் செயலாளர்கள் எனப்பலரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
குடிமக்களுக்கான வரவுசெலவுத் திட்டமெனும் இச்சாதனமானது பொது மக்கள் மீது கொண்டிக்கும் வகைப்பொறுப்பு மற்றும் பொது மக்கள் அதிகளவில் இச்செயன்முறையில் பங்கேற்றல் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதற்கான முக்கியமானதொரு சாதனமாகும். இந்த ஆவணம் பொதுமக்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டதொரு ஆவணமாக இருப்பதுடன் பொது நிதி எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றது என்பதையும் அது எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பற்றியும் பொது மக்கள் சிறந்ததொரு புரிதலை பெற்றுக்கொள்வதற்கு வழிசமைக்கும் நோக்கில் இதனை எளிமையானதாகவும், குறைந்த தொழில்நுட்ப வடிவத்திலும் முன்வைக்கின்றது.
கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன அவர்களினால் இந்த ஆவணம் பொதுமக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் இதனையொட்டி ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி நிகழ்வில் நிதி கிழக்கின் சிவில் சமூக அமைப்புகள், கல்வியாளர்கள் மற்றும் பெருமளவு பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
குடிமக்கள் வரவுசெலவுத்திட்டத்தின் உள்ளடக்கத்தில் மாகாண சபையின் நிதி எங்கிருந்து வருகிறது, அவை எதற்காக செலவிடப்படுகின்றது என்பதைப் பற்றிய விளக்கம் எளிமையான சொற் பிரயோகங்களைக் கையாண்டு, கண்கவரும் வகையிலும் ஆக்கபூர்வமான முறையிலும் தரப்பட்டுள்ளதுடன் இத்திட்டத்தில், கிழக்கு மாகாண சபையானது ஐக்கிய நாடுகளின் சிறுவர்கள் நிதியமான யுனிசெப்பின் ஆதரவினைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்நிகழ்வின் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் சரத் அபயகுணவர்தன,
"கிழக்கு மாகாண சபை, தனது மாகாணத்தின் வளர்ச்சியை நோக்கி செயல்படுவதற்கும் உண்மையிலேயே மக்களுக்கானதொரு வரவுசெலவுத் திட்டத்தை உருவாக்குவதற்கும் உறுதிபூண்டுள்ளதுடன், குடிமக்களுக்கான இந்த வரவுசெலவுத் திட்டம் அத்திசையை நோக்கியதொரு முயற்சியாக அமைவதாகவும் எதிர்காலத்தில் வரவிருக்கும் இதைப்போன்ற பல ஆவணங்களின் முதலாவது ஆவணமாக இது அமைகின்றதெனவும் இந்த ஆவணம் மக்களால் தழுவிக்கொள்ளப்பட்டு பயன்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் தெரவித்தார்.

இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி திரு டிம் சுட்டன் கருத்து தெரிவிக்கும் போது,
“இலங்கை அரசாங்கத்தினால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கைசாத்திடப்பட்டு இவ்வாண்டின் ஆரம்பத்தில் இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மீண்டும் தனது அர்ப்பணிப்பினை வெளியிட்டுள்ள இச்சாசனத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கு இலங்கையிலுள்ள அனைத்து சிறுவர்களும் உரித்துடையவர்களாக இருக்கின்ற போதிலும் இந்த அனைத்து உரிமைகளும் யதாரத்தமானதாக மாற்றமடைய வேண்டுமாயின், அரசாங்கமானது பொருத்தமான முதலீடுகளை மேற்கொள்ளுதல் அத்தியாவசியமானதாகும்.
சிறுவர்களுக்காக எவ்வாறான முதலீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை நுண்ணாய்வு ரீதியில் காண்பதற்கும் அதில் ஏதேனும் மாற்றங்கள் தேவையாயின் அதற்காக வேண்டுகோள் விடுப்பதற்கும் குடிமக்களுக்கான வரவுசெலவுத் திட்டம் பொதுமக்களுக்கு வாய்ப்பினை வழங்குகின்றது. இந்த அரும்பணியை மேற்கொண்டமை தொடர்பாக கிழக்கு மாகாண சபைக்கு எமது பாராட்டு உரித்தாகுதல் வேண்டும்.
இந்த வரவுசெலவுத் திட்டம் பொது மக்களினதும் குறிப்பாக சிறுவர்களினதும் எதிர்காலத்தின் மீது தாக்கம் செலுத்துக்கூடிய தீர்மானங்களைப் பற்றி அதிகமாக விழிப்புணர்வு அடைவதற்கும் தீர்மானங்களை மேற்கொள்வதில் பங்கேற்பதற்கும் வழியமைக்கின்றதென அவர் மேலும் தெரிவித்தார்.
பல்லின மாகாணமாக அமையும் கிழக்கு மாகாணம் ஏறக்குறைய 1.7 மில்லியன் இலங்கையர்களின் வாழ்விடமாக காணப்படுவதுடன் இம்மாகாணத்தின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுவர்களாவர்.
இந்த வரவுசெலவுத் திட்டத்தினை தயாரித்த கிழக்கு மாகாண சபை அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் பொது மக்கள் சந்திப்புகளை நடாத்தியதுடன் இதன் மூலம் திரட்டிக்கொள்ளப்பட்ட கருத்துக்கள் இறுதி ஆவணத்தை நிறைவாக்கம் செய்வதற்கான உள்ளீடாக பயன்படுத்தப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் குடிமக்கள் வரவுசெலவுத் திட்டமானது, 2019 ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பல்வேறுபட்ட அமைச்சுகளுக்கும் அவற்றின் நிரல் திணைக்களங்களுக்குமான செலவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2019 ஆம் ஆண்டிற்கான, கிழக்கு மாகாண சபையின் மொத்த வரவுசெலவுத் திட்டம் ரூ. 29,147 மில்லியனாக இருப்பதுடன் இதில் 82 வீதம் மத்திய அரசாங்கத்திலிருந்து கிடைக்கப்பெறுகின்ற மானியங்களிலிருந்தும், 17 வீதம் மாகாணத்திற்குள் வருவாய் ஈட்டியதிலிருந்தும், 1 வீதம் வெளிநாட்டு நிதிகளிலிருந்தும் கிடைக்கின்றது.
இந்த வரவுசெலவுத் திட்டமானது அடிப்படை சேவைகளை வழங்குவதற்கும் அன்றாட நிர்வாக நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல், கண்காணித்தல் மற்றும் வசதிபடுத்துதல் போன்ற விடயங்களுக்கும் சிறு உட்கட்டமைப்பு, சமுதாய மேம்பாடு மற்றும் நிறுவன திறன்களை வளர்த்தல் ஆகியவற்றிற்கும் கிழக்கு மாகாண சபையானது கொண்டுள்ள பொறுப்பினை எடுத்தியம்புகின்றது.
கிழக்கு மாகாண சபையின் கீழ் 40,000 இற்கும் மேற்பட்டோர் பல்வேறு மட்டங்களில் பணியாற்றுகின்றனர். இந்த எண்ணிக்கையில் நிர்வாக அதிகாரிகள், 22,000 கல்விசார் ஊழியர்கள், 13,000 சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி, கிராமிய கைத்தொழில்கள், உள்ளூராட்சி, சமூக சேவைகள், நன்னடத்தை, கலாச்சார அலுவல்கள், விளையாட்டு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற முக்கிய சமூக பொருளாதார துறைகளுக்கான முன்னோடி அலுவலர்களும் உள்ளடங்குகின்றனர்.
குடிமக்கள் வரவுசெலவுத் திட்டம் மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டம் மீண்டெழும் மற்றும் மூலதனச் செலவினங்களுக்கிடையில், துறைகளுக்கிடையில் மற்றும் மூன்று வெவ்வேறு மாவட்டங்களுக்கிடையில் எவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளது என்பதை விவரிப்பதாக அமைவதுடன் சில முக்கிய சமூகத் துறைகளுக்கான ஒதுக்கீடுகளையும் எடுத்தியம்புகின்றது.

மொத்த மாகாண வரவுசெலவுத் திட்டத்தில் 67சதவிகிதம் சம்பளத்தை செலுத்துவதை நோக்கி செலவிடப்படுவதுடன், மற்றைய 20 வீதம் பராமரிப்பு மற்றும் பண்டங்கள் மற்றும் சேவைகள் போன்ற பிற மீண்டெழும் செலவினங்களுக்காக செலவிடப்படுகின்றது.
2019 ஆம் ஆண்டில், கிழக்கு மாகாண சபையின் வரவுசெலவுத் திட்டத்தின் மிகப் பெரிய பங்கை கல்வித் துறை தனதாக்கிக்கொண்டதுடன் இது முழு செலவினத்தில் பாதியளவாகும். சுகாதாரத் துறை மாகாண வரவுசெலவுத் திட்டத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கினை பெற்று இரண்டாவது ஆகக்கூடியத் தொகையை தனதாக்கிக்கொண்டது.

மாகாண வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளூராட்சி அமைச்சு சுமார் 12வீதம் பெற்றதுடன், விவசாயத் துறை 5வீதம் பெற்றது. மாகாண செலவினத்தில் மீதமுள்ள 9வீதம் மற்றைய துறைகளுக்கானதாகும். மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட மூலதன செலவினத்தைப் பொறுத்தவரை, அதன் மொத்தத் தொகையில் 38வீதம் மட்டக்களப்புக்கும், 37வீதம் அம்பாறைக்கும், 25வீதம் திருகோணமலைக்கும் ஒதுக்கப்பட்டன.
ஒரு விரிவான சர்வதேச பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடாக அமையும் திறந்த வரவுசெலவுத் திட்ட மதிப்பீடு (2017), அரசாங்கங்கள் வரவுசெலவுத் திட்ட தகவல்களை அணுகுவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கின்றதா என்பதைப் பற்றியும் வரவு செலவுத் திட்ட செயற்பாட்டில் பங்கேற்பதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகின்றதா என்பதைப் பற்றியும் மதிப்பீடு செய்கிறது.

வெளிப்படைத்தன்மை எனும் விடயத்தில் இலங்கை 100 இல் 44 மதிப்பெண்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் இதன் மூலம் புலப்படும் விடயம் யாதெனில் நாடு வரையறுக்கப்பட்ட அளவிலேயே வரவுசெலவுத்திட்ட தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குகின்றது என்பதாகும்.
பொதுமக்கள் பங்கேற்பினை பொருத்தமட்டில் வரவுசெலவுத் திட்ட செயன்முறையில் பங்கேற்பதற்கு பொதுமக்களுக்கு ஒரு சில வாய்ப்புகளை வழங்கியுள்ள நிலையில் இவ்விடயத்திற்கு கிடைத்திருக்கும் மதிப்பெண்கள் 100 இல் 11 ஆகும். இந்த மதிப்பீட்டின் முக்கிய பரிந்துரை யாதெனில் குடிமக்கள் வரவுசெலவு திட்டம் வெளியிடப்பட வேண்டுமென்பதாகும்.

No comments: