News Just In

11/06/2019 04:54:00 PM

பாராளுமன்ற அமர்வு நாளை


பாராளுமன்றம் நாளை காலை 10:30 இற்கு கூடவுள்ளது. சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வுகள் தொடர்பாக சபாநாயகர் செயலகத்தின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;

புத்தாக்க முகவர் நிறுவனத்தை ஸ்தாபிக்கும் சட்டம் நாளை பாராளுமன்றத்தில்

புத்தாக்கம் தொடர்பிலான தேசியக் கொள்கைகளை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்வதற்காக புத்தாக்க முகவராண்மையை ஸ்தாபித்தல் தொடர்பான சட்டம் நாளை (07) பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.

தேசிய ஆய்வுகளை தேசிய பொருளாதாரத்திற்கு பயன்படுத்துதல், புத்தகம் தொடர்பில் காணப்படும் தடைகளை கண்டறிதல் மற்றும் புத்தகத்துக்காக தனியார் துறையினரின் உதவியை பெற்றுக்கொள்ளும் நிறுவனமாக தேசிய புத்தாக்க முகவர் நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தேசிய புத்தாக்க முகவராண்மை ஒரு நிர்வாக சபையால் நிவாகிக்கப்படும். இந்த நிர்வாகத்தின் தலைவராக ஜனாதிபதியின் செயலாளர் காணப்படுவார். ஏனைய உறுப்பினர்களாக, அபிவிருத்தி மூலோபாய அமைச்சின் அதிகாரியொருவர், தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படும் நபரொருவர், 

இலங்கை புலமைச் சொத்து அலுவலகத்தின்பணிப்பாளர் நாயகம், விஞ்ஞான விடயப்பொறுப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர், தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி விடயப்பொறுப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர், சர்வதேச வர்த்தக விடயப்பொறுப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர், இலங்கை நெனோ தொழிநுட்ப நிறுவனத்தின் தலைவர் அல்லது அவரால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் உள்ளடங்கப்படுவர்.

அவ்வப்போது ஜனாதிபதியின் அறிவுறுத்தல்படி நிர்வாக சபை செயற்படவேண்டும். அதேபோன்று ஜனாதிபதியின் மூலம் இந்த சட்டத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் ஒழுங்குவிதிகள் மேற்கொள்ளப்படும். அனைத்து ஒழுங்குவிதிகளும், அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குள் அனுமதிக்காக பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கப்படவேண்டும்.

புத்தாக்க தொழில்முனைவோர் வியூகத்திற்கு ஏற்ப தேசிய புத்தாக்க சூழலை பேணுதல், ஆய்வுகள் மற்றும் தொழிநுட்ப பரிமாற்றம் மூலம் உருவாகும் உயர் தொழிநுட்ப நிறுவனங்களுக்கான வசதிகளை செய்துகொடுத்தல், தனியார் மற்றும் அரச துறையினருடனான ஒருங்கிணைப்பு என்பன இந்த முகவர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் பொறுப்புகளாகும்.

No comments: