வவுனியாவில் மின் துண்டிப்புக்கு சென்ற மின்சார சபையின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 05 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று (04-11-2019) இடம்பெற்றுள்ளது.
வவுனியாவின் ஆச்சிபுரம் பகுதியில் மின்சாரத் துண்டிப்புக்காக மின்சார சபையினர் சென்றுள்ளளர். இதன்போது குறித்த பகுதியில் வீட்டாருக்கும் மின்சார சபையினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடிய பலர் மின்சார சபை வாகனத்தை நகர விடாது தடுத்து நிறுத்தியமையால் குழப்பம் ஏற்பட்டது.
இதில், மின்சார சபையினைச் சேர்ந்த 05 பேர் கம்பிகளால் தாக்கப்பட்டமையால் காயமடைந்தனர். மின்சார சபை வாகனம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார சபையினரால் 119 இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிஸார் 3 பெண்களைக் கைது செய்ததுடன் சம்பவம் தொடர்பில் பலரை தேடி வருகின்றனர்.
11/05/2019 10:48:00 AM
மின்சார சபை ஊழியர்கள் மீது கம்பிகளால் தாக்குதல்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: