News Just In

11/08/2019 07:10:00 AM

மட்டக்களப்பில் மூன்று வாக்காளர்களுக்கு ஒரு வாக்கெடுப்பு நிலையம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவு தொழுநோய் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்ற மூன்று நபர்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் நவம்பர் 15ம் திகதி இந்துக்கல்லூரியின் வழங்கல் பிரிவில் இருந்து எடுத்து சென்று வவுணதீவு வாக்கெடுப்பு நிலையத்தில் இருந்து மறுநாள் மாந்தீவுக்கு எடுத்து செல்லப்படும்.

மாந்தீவுக்கு இயந்திரபடகு மூலமாக வாக்கு சீட்டுக்கள் எடுத்து செல்லப்பட்டு வழமையான நேரத்திற்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டு மாலை 05 மணிக்கு வாக்கெடுப்பு நிறைவுபெறுமென தெரிவத்தாட்சி அலுவலர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மாவட்டத்தில் மிகவும் வாக்காளர் குறைந்த வாக்கெடுப்பு நிலையமாக இவ் வாக்களிப்பு நிலையம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: