அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட நால்வர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ருவன்வெலிசாய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின்போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை அநுராதபுரம் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ராஜாங்கனை சத்தாரதன தேரர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தாமைக்கான காரணம் என்னவென விளக்கமளிக்குமாறு, அநுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பிரதம நீதவான் நேற்று (17) உத்தரவிட்டிருந்தார்
அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர், எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments: