News Just In

11/26/2026 10:30:00 AM

பாதாள உலகக் குழுவினருக்கு அரச துப்பாக்கியை வழங்கியதாகக் குற்றச்சாட்டு – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

பாதாள உலகக் குழுவினருக்கு அரச துப்பாக்கியை வழங்கியதாகக் குற்றச்சாட்டு – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது



கல்கிசை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய காலத்தில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணி, பொலிஸ் கடமைகளுக்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை அவர்களிடம் ஒப்படைத்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: